முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் மாற்றம்!

#SriLanka #Mullaitivu
Mayoorikka
2 years ago
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் மாற்றம்!

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக அருளானந்தம் உமாமகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 இவர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக முன்னர் பணியாற்றியிருந்தார்.

 முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய க.விமலநாதன் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அந்த இடத்திற்கு நிலவிய வெற்றிடத்திற்காக உமாமகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான அ. உமாமகேஸ்வரன் திருகோணமலை, கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றியவர்.

 திருகோணமலை மாவட்டத்தின் வெருகல், குச்சவெளி ஆகிய பிரதேசங்களின் பிரதேச செயலாளராகவும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராகவும் கடமையாற்றிய அ.உமாமகேஸ்வரன் இறுதியாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!