ஹைதராபாத் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து- பயணிகள் உயிர் தப்பினர்!
#India
#Accident
#Railway
#Train
#fire
#Breakingnews
Mani
2 years ago

மேற்கு வங்க மாநிலம் அவுராவில் இருந்து புறப்பட்டு தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நோக்கிச் சென்ற பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில், ஹைதராபாத் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ, பின்னர் மற்ற பெட்டிகளுக்கும் பரவ தொடங்கியது.
இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது, பயணிகள் உடனடியாக கீழே இறக்கிவிடப்பட்டனர். இதனால் அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.
இந்த ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



