பிரதமர் மோடி தலைமை விருந்தினராக கலந்து கொள்ளும் பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் இந்திய முப்படைகள் பங்கேற்பு
#India
#PrimeMinister
#TamilCinema
#IndianArmy
#parties
Mani
1 year ago

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது, இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
பிரான்ஸ் தேசிய தினத்தன்று இந்தியாவின் முப்படைகளும் பங்கேற்கும் மாபெரும் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அத்துடன் 3 ரபேல் போர் விமானங்களும் சாகசத்தில் ஈடுபடுகின்றன.
நேற்று டெல்லியில் இருந்து 269 இந்திய ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டு சென்றனர். இவர்கள் பிரெஞ்சு படையினருடன் இந்த பிரமாண்ட அணிவகுப்பில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த தகவலை ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒன்றில் தெரிவித்து உள்ளது. முதல் உலகப் போர் தொடங்கியதில் இருந்து இந்தியாவுக்கும், பிரான்ஸுக்கும் ராணுவத்துக்கு இடையே வலுவான உறவு இருப்பதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



