மசகு எண்ணெய் விலை குறைக்கப்படவுள்ளது
#SriLanka
#Oil
#இலங்கை
#விலை
Mugunthan Mugunthan
2 years ago
மசகு எண்ணெய் விலையை குறைப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அடுத்த வாரம் கலந்துரையாடப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமை மற்றும் வட்டி விகிதங்கள் குறைவினால் மசகு எண்ணெயின் விலையை குறைக்க முடியும் என வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.