கீய்வ் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு

#Death #Suicide #Attack #Ukraine #Bomb
Prasu
2 years ago
கீய்வ் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு

கிய்வ் மாவட்ட நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழிந்துள்ளதுடன், இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கீவின் ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் போர் நடவடிக்கைகளுக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, உயிரிழந்த குறித்த நபர் இகோர் குமென்யுக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நான்கு தேசிய காவலர்களின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்ததாக செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

 கடந்த ஆண்டு பெப்ரவரியில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து கியேவ் பலத்த பாதுகாப்பில் உள்ளது மற்றும் இரவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!