கனமழை எதிரொலி! கோவை வால்பாறையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

#India #School #Tamil Nadu #Student #Tamil Student #Rain #HeavyRain #students #2023 #Tamilnews #School Student #College Student
Mani
2 years ago
கனமழை எதிரொலி! கோவை வால்பாறையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இதனிடையே பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று இரண்டாவது நாளாக வால்பாறை பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக இன்று உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில், குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, புதுச்சேரி, மாகே பிராந்தியத்தில் கனமழை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு இரண்டாவது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் கண்ணூர், இடுக்கி, திரிசூர், எர்ணாகுளம், பாலக்காடு, கோட்டயம், கோழிக்கோடு, காசர்கோடு, ஆலப்புழா, கொல்லம், பத்தனம் திட்ட ஆகிய மாவட்டங்க்ளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!