பிரான்ஸில் மற்றுமொரு இளைஞரும் பொலிஸாரால் சுட்டுக்கொலை!
#France
#world_news
#Lanka4
Thamilini
2 years ago
பிரான்ஸில் நஹெல் என்ற இளைஞரை பொலிஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பதற்றம் தணிவதற்குள் மற்றுமொரு இளைஞரையும் பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்த சம்வம் மார்ஸ்லே நகரில் நடைபெற்றுள்ளது. 27 வயதுடைய இளைஞர் ஒருவரே துப்பாக்கிக்சூட்டுக்கு இழக்காகி உயிரிழந்துள்ளார்.
கலவரங்களை அடக்குவதற்கு பயன்படுத்தப்படும் LBD எனப்படும் துப்பாக்கியை பயன்படுத்தி பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில் 27 வயதுடைய இளைஞர் இதய பாதிப்படைந்து உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.