தென்னாப்பிரிக்காவில் நச்சுவாயு கசிவால் குறைந்தது 16 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் அருகே நச்சு வாயு கசிந்தில் மூன்று குழந்தைகள் உள்பட குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 24 பேர் இறந்திருக்கலாம் என்று அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளன.
ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கு புறநகரில் உள்ள போக்ஸ்பர்க் நகரில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் மீட்பு குழுவினர் பணியாற்றி வருவதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கைச் சுற்றியுள்ள பகுதி தங்கம் நிறைந்த பகுதியாக இருப்பதால், இந்த பகுதியில் சட்டவிரோத சுரங்கங்கள் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு அனுமதியின்றி தோண்டப்படும் சுரங்கங்களால் விசவாயுக்கள் வெளியாகுவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தடயவியல் ஆய்வாளர்கள் மற்றும் நோயியல் நிபுணர்கள் வாயு கசிவு நடந்த இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



