நுவரெலியா மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக நுவரெலியா மாவட்டத்திற்கு கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி இன்று (ஜுலை 06) காலை 11 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2 ஆம் நிலை (ஆம்பர்) எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் மக்கள், தேவை ஏற்பட்டால் பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயர தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை, நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்கு முதலாம் நிலை எச்சரிக்கை (மஞ்சள் எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.