இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம் - காங்கிரஸ் கட்சி கண்டனம்

#India
Prasu
2 years ago
இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம் - காங்கிரஸ் கட்சி கண்டனம்

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் மீது ஒருவர் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பாரதிய ஜனதா கட்சி மீது காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக ஆட்சியில் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்து வருவதாகவும், “மனிதாபிமானமற்ற” குற்றம், “பழங்குடியினர் மற்றும் தலித்துகள் மீதான பாஜகவின் வெறுப்பின் உண்மையான தன்மையை” காட்டுகிறது என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார்.

“பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. மத்திய பிரதேசத்தில் பாஜக தலைவர் ஒருவரின் மனிதாபிமானமற்ற குற்றத்தால் ஒட்டுமொத்த மனித குலமே அவமானமடைந்துள்ளது.

பழங்குடியினர் மற்றும் தலித்துகள் மீதான பாஜகவின் வெறுப்பின் கேவலமான முகமும் உண்மையான குணமும் இதுதான்” என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

 குற்றம் சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லாவை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவருக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!