'திரெட்ஸ்' என்ற புதிய செயலியை ஜூலை 6ந் தேதி அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டம்
#India
#Facebook
#Twitter
#world_news
#Development
#technology
#ElonMusk
#Mobile
Mani
2 years ago

ட்விட்டர் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா "திரெட்ஸ்" என்ற பெயரில் புதிய செயலியை வியாழக்கிழமை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல ஆண்டுகளாக ட்விட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டிலிருந்த நிலையில், பிரத்யேக சேவைகளுக்கான சந்தா கட்டணம், அங்கீகரிக்கப்பட்டாத பயனர்கள் நாளொன்றுக்கு 1,000 பதிவுகள் மட்டும் பார்க்க முடியுமென அண்மையில் எலன் மஸ்க் கட்டுப்பாடுகள் விதித்தது பயனர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
ட்விட்டருக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட தளங்களான புளூஸ்கை, மாஸ்டோடான் போன்றே, திரெட்ஸ் சேவையும் பரவலான சமூக வலைதளமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.



