அமெரிக்காவில், பொழுதுபோக்கு பூங்காவில் இயந்திர கோளாறு காரணமாக அந்தரத்தில் பழுதாகி நின்ற ரோலர் கோஸ்டர்!
#America
#people
#world_news
#Tamilnews
#Breakingnews
Mani
2 years ago

அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணம் ஃபாரஸ்ட் கவுண்டியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ஓடிக் கொண்டிருந்த ரோலர் கோஸ்டர், இயந்திர கோளாறு காரணமாக அந்தரத்தில் பழுதாகி நின்றது.
இதனால் அதில் பயணம் செய்த 8 பேர் சில மணி நேரங்கள் தலைகீழாக அந்தரத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தரையிலிருந்து 100 அடி உயரத்திற்கு மேல் ரோலர் கோஸ்டர் நின்றதால், அதற்கேற்ப சாதனங்களை கொண்டுவந்து மீட்பு நடவடிக்கைகளை தொடங்க 2 மணி நேரங்கள் ஆகின. 3 நகரங்களை சேர்ந்த தீ அணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.



