ஹோர்முஸ் ஜலசந்தி அருகே இரண்டு கப்பல்களை கைப்பற்ற முயற்சித்த ஈரான்!
#world_news
#Lanka4
#Iran
Thamilini
2 years ago
ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தி அருகே இரண்டு எண்ணெய் டேங்கர்களைக் கைப்பற்ற முயன்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளதுடன், அவற்றில் ஒன்றை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளது.
இரண்டு சந்தர்ப்பங்களிலும், அமெரிக்க கடற்படையின் ஆபத்து சமிக்ஞைகளுக்கு பதிலளித்த பின்னர் ஈரானிய கடற்படை கப்பல்கள் பின்வாங்கியதாகவும், இரண்டு வணிகக் கப்பல்களும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரான் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது ஐந்து வணிகக் கப்பல்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் மேலும் பலவற்றைத் சேதப்படுத்தியுள்ளதாகவும் அமெரிக்க கடற்படை குறிப்பிட்டுள்ளது.
பாரசீக வளைகுடாவின் குறுகிய வாயில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்றுபல சம்பவங்கள் நடந்துள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.