பாகிஸ்தானில் கடும் மழை : 18 பேர் உயிரிழப்பு!
#world_news
#Pakistan
#Lanka4
Dhushanthini K
2 years ago

பாகிஸ்தானில் கடும் மழைகாரணமாக சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 291 மில்லிலீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியே மக்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்பதாகவும் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் லாகூர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னமும் இதுபோன்ற ஒரு அனர்த்தத்தை எதிர்கொண்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.



