மக்கா புனித யாத்திரை சென்ற இலங்கையர்கள் இருவர் உயிரிழப்பு
#SriLanka
#Death
#Muslim
Prathees
2 years ago
மக்காவிற்கு புனித யாத்திரை சென்ற இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். முஸ்லிம் சமய அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதுடன், அவர் கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றைய நபர் விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.