இந்திய மீனவர்கள் 21 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை!

#Court Order #Lanka4
Thamilini
2 years ago
இந்திய மீனவர்கள் 21 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு  05 வருட  ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதித்து  ஊர்காவற்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட போது  கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி இந்திய கடற்தொழிலாளர்கள் 22 பேரும் கைது செய்யப்பட்டனர்.  

அவர்கள் இன்றைய தினம் (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி கைது செய்யப்பட்ட 22 பேரில் 21 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும், 16 வயதுடைய சிறுவனுக்கு நன்னடத்தை பிணையில் செல்லவும் உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது. குறித்த சிறுவன் 10 ஆயிரம் ரூபாய் நன்னடத்தை பிணையில் விடுதலை செய்யப்படவுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!