யானை - மனித மோதலை தீர்க்க தேசிய கொள்கை அவசியம்: அமைச்சர் பவித்ரா

#SriLanka #Elephant
Prathees
2 years ago
யானை - மனித மோதலை தீர்க்க தேசிய கொள்கை அவசியம்: அமைச்சர் பவித்ரா

யானை - மனித மோதலைத் தீர்ப்பதற்கு தேசிய கொள்கை மற்றும் வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டுமென வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். 

 வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் முயற்சியின் கீழ் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் தலையீட்டின் கீழ் தயாரிக்கப்பட்ட யானை-மனித மோதலைத் தீர்ப்பதற்கான தேசிய கொள்கை மற்றும் வேலைத்திட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார். 

மற்றும் துறைசார் கண்காணிப்புக் குழுக்களுக்குப் பரிந்துரைத்து தேவையான நடவடிக்கைகள் குறித்து முறையான ஏற்பாடு செய்யப்பட வேண்டும் யானை-மனித மோதலை நிர்வகித்தல் தொடர்பாக இலங்கை அறக்கட்டளையில் நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

 தற்போதைய சூழ்நிலையில் யானை - மனித மோதல் நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், எவ்வளவு பணம் செலவழித்தாலும் நிரந்தர தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அமைச்சர் வித்ரா வன்னியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

 இந்த பிரச்சினைக்கு குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால தீர்வுகளுடன் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!