உள்ளுராட்சி மன்றங்களை மீண்டும் அமைக்க அரசாங்கம் முயற்சி!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை மீண்டும் அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இது குறித்த காரசாரமான விவாதங்கள் பாராளுமன்றில் நடைபெற்று வருகிறன.
இது தொடர்பான பிரேரணையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கடகொட சமர்பித்தார்.
இதனையடுத்து கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை மீண்டும் அமைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி சட்டவிரோதமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது “காக்கைத் திட்டம்” என்று விமர்சித்த சஜித் பிரேமதாச இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகளுக்கு சுதந்திரம் இருப்பதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.