Zaporizhzhia அணுமின் நிலையத்தை தகர்க்க திட்டமிடும் ரஷ்யா?
#world_news
#Lanka4
Dhushanthini K
2 years ago

உக்ரைனின் Zaporizhzhia அணுமின் நிலையத்தை தகர்க்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய இராணுவத்தினர் Zaporizhzhia அணுமின் நிலையத்தை சுற்றி வெடிமருந்துகளை நிரப்பியுள்ளதாகவும், இன்று (ஜுலை 5) அதனை வெடிக்கவைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
ககோவ்கா அணை சேதப்படுத்தியுள்ள நிலையில், தாக்குதலுக்கான வாய்ப்புகள் அதிகம் என்றே வாஷிங்டன் போஸ்ட் எச்சரித்துள்ளது.
அணுமின் நிலையத்தில் தாக்குதல் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ரஷ்ய தலைமையிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டதாகவே கூறப்படுகிறது.
அவ்வாறு ரஷ்யா அணுமின் நிலையத்தை தாக்குமானால், பயங்கரவாத தாக்குதலை முன்னெடுப்பதாகவே அர்த்தப்படும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.



