நடாஷா எதிரிசூரியவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு
#SriLanka
#Arrest
#Police
#Court Order
#Lanka4
Kanimoli
2 years ago
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடாஷா எதிரிசூரியவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அவர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் பிணை கோரிக்கையை எதிர்க்கப் போவதில்லை என தெரிவித்ததையடுத்து நீதிபதி பிணை உத்தரவை அறிவித்ததாக டெய்லி சிலோன் செய்தியாளர் தெரிவித்திருந்தார்.