தெற்கு சூடானின் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியீடு!
#world_news
#Lanka4
Dhushanthini K
2 years ago

தெற்கு சூடானில் தாமதமான தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சூடானின் தற்போதைய தலைவர் சல்வா கீர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இது ஒரு வரலாற்று நிகழ்வு என்று வர்ணித்துள்ளார். நீண்ட காலமாக தாமதமான தேர்தல்கள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் என்று உறுதிப்படுத்தினார்.
2011 ஆம் ஆண்டு முதல் நாட்டை வழிநடத்துவதில் முக்கிய பங்காற்றிய சல்வா கீர், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புத்துயிர் பெற்ற சமாதான உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார்,
அந்நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாட்டின் ஒரே ஜனாதிபதியாக சல்மான் கீர் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



