காலநிலை மாற்றம், இணைய பாதுகாப்பை சமாளிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்!

காலநிலை மாற்றம், இணைய பாதுகாப்பு மற்றும் நீர் பற்றாக்குறையை சமாளிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து ஜி20 நாடுகளின் கூட்டத்தில் பேசிய இந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மேற்படி வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ஜி20 உறுப்பு நாடுகள் தங்கள் வேறுபாடுகளைக் கடந்து, உலகளாவிய சவால்களைச் சமாளிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
நவீன உலகின் சிக்கல்களைத் தீர்ப்பதில் உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வின் முக்கியத்துவத்தை அவர் இதன்போது வலியுறுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச மன்றங்களில் இந்த அணுகுமுறையை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், கூட்டு ஞானம் மற்றும் நிபுணத்துவத்தின் அவசியத்தையும் அவர் எடுத்துக்கூறியுள்ளார்.
.அனைவருக்கும் நிலையான வளர்ச்சி மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக G20 நாடுகள் தங்கள் ஒருங்கிணைந்த வளங்களைப் பயன்படுத்தவும், புதுமை கலாச்சாரத்தை வளர்க்கவும் ஜிதேந்திர சிங் அழைப்புவிடுத்துள்ளார்.



