வாக்னர் கூலிப்படை : ஆயுத கிளர்ச்சிக்குப்பின் எவ்ஜெனி பிரிகோஜினின் அறிவிப்பு

#world_news #Lanka4 #Russia Ukraine
வாக்னர் கூலிப்படை :  ஆயுத கிளர்ச்சிக்குப்பின் எவ்ஜெனி பிரிகோஜினின் அறிவிப்பு

ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டு பெலாரஸில் தங்க வைக்கப்பட்டுள்ள வாக்னர் கூலிப்படை தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின், தங்கள் படையின் வெற்றியை இனி எவராலும் தடுக்க முடியாது என சூளுரைத்துள்ளார்.

 ரஷ்யாவில் புடின் தலைமைக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியை முன்னெடுத்து, திடீரென்று அதனை கைவிட்டு, தற்போது பெலாரஸ் நாட்டிற்கு வெளியேற்றப்பட்டுள்ள வாக்னர் கூலிப்படை தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின் ஓடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 பொதுவாக காணொளி பதிவாக வெளியிட்டு, தமது நிலைப்பாட்டை வெளியிடும் எவ்ஜெனி பிரிகோஜின், முதல்முறையாக ஓடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

 ரஷ்ய இராணுவத் தலைமைக்கு எதிராக முன்னெடுத்த ஆயுத கிளர்ச்சி தோல்வியில் முடிவடைந்த பின்னர்,வெளியேற்றப்பட்ட எவ்ஜெனி பிரிகோஜின், இதுவரை எந்த கருத்தையும் வெளியிடாத நிலையில், தற்போது முதன்முறையாக அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

 எங்கள் நீதிக்கான அணிவகுப்பு என்பது துரோகிகளை எதிர்த்துப் போராடுவதையும் சமூகத்தை அணிதிரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டது என அந்த ஓடியோவில் பிரிகோஜின் குறிப்பிட்டுள்ளார்.

 இதில் நாங்கள் பெரும்பாலும் வெற்றி வாகை சூடியுள்ளோம். எதிர்காலத்தில், எங்கள் அடுத்த வெற்றிகளை நீங்கள் முன்னணியில் காண்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 அந்த ஓடியோவில் தாம் எங்கிருக்கிறேன் என்பதை குறிப்பிடாமல் பேசியுள்ளதுடன், தமது படை உரிய நேரத்தில் மீண்டும் களமிறங்கும் என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!