சீனாவின் சோங்கிங் நகரில் பெய்த கனமழையால் 15 பேர் பலி!

#China #Death #Rain #HeavyRain #Tamilnews #Died
Mani
2 years ago
சீனாவின் சோங்கிங் நகரில் பெய்த கனமழையால் 15 பேர் பலி!

கடந்த ஆகஸ்ட் முதல், தென்மேற்கு சீனாவில் உள்ள சோங்கிங் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது, இது 19 மாவட்டங்களில் வசிக்கும் 130,000 க்கும் மேற்பட்ட நபர்களின் வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

முக்கியமாக யாங்சே ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 7,500 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. அங்கு பேரிடர் மீட்பு குழு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை 7 மணி நிலவரப்படி கனமழையினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேரினை காணவில்லை எனவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக வான்சு மாவட்டம், கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவ, போர்வைகள் மற்றும் மடிப்பு படுக்கைகள் உட்பட 29,000 பேரிடர் நிவாரணப் பொருட்களை மாநில அவசர அலுவலகம் அனுப்பியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!