தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் மன இறுக்க நோயினால் பாதிக்கப்பட்ட மகனின், தாய்க்கு நன்கொடை வழங்கியுள்ளார்
#SriLanka
#Lanka4
#இலங்கை
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
தியாகி தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் அவரது அலுவலத்தில் Live Green Organic Garden ( LGOG) எனும் வீட்டுத்தோட்ட ஊக்குவிப்பாளர் அமைப்பின் செயற்பாட்டு மேம்பாட்டுக்கான ஊக்குவிப்புத் தொகையை அன்பளிப்பு செய்ததோடு , அவர்களின் பயனாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகள் மற்றும் பழங்களை தனது விற்பனைத் தளத்திற்காக கொள்வனவு செய்து உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் மன இறுக்க நோயினால் (Autism) அவதியுறும் தன் மகனை கணவரின் உதவியின்றிய நிலையில் பராமரிக்க அவதிப்படும் தாய்க்கு அவர்கள் வசிக்கும் வீட்டினை பூரணப்படுத்தவும் பிள்ளையைப் பராமரிக்கவும் நிதியுதவி செய்து , அவ்வப்போது வந்து பிள்ளைக்குத் தேவையான உதவிகளை பெற்றுச் செல்லுமாறும் ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளார்.
