கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ்ஸின் விலைகளில் மாற்றம்!
#SriLanka
#prices
#Food
Mayoorikka
2 years ago
கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை 10% குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று (05) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் திரு.அசேல சம்பத் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி 700 ரூபாவாக இருந்த கொத்து ரொட்டியின் விலை 70 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 1000 ரூபாயாக காணப்பட்ட கொத்து ரொட்டியின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு விலை திருத்தத்தின் பயனை மக்களுக்கு வழங்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திரு.அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.