இராணுவ முகாமிற்கு முன்பாக தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற தாய்!

#SriLanka #Vavuniya
Mayoorikka
2 years ago
இராணுவ முகாமிற்கு முன்பாக தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற தாய்!

இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் இராணுவமுகாமிற்கு முன்பாக தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று வவுனியாவில் பதிவாகியுள்ளது.

 குறித்த சம்பவம் இன்று (05) காலை இடம்பெற்றஉள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, குருணாகல் வரக்காபொல பகுதியில் வசித்து வரும் 34வயதுடைய குறித்த பெண்ணுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 

இவர்களின் குடும்பத்தினுள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பிள்ளைகளையும் தந்தை அழைத்துச்சென்று இருவரும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

 இந்நிலையில் குறித்த இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கும் வன்னி இராணுவ தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் குடும்பஸ்தரான இராணுவ வீரர் ஒருவருக்குமிடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

 எனினும் சில வாரங்களாக குறித்த இராணுவ வீரருடைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

 இதனால் விரக்தியடைந்த குறித்த குடும்ப பெண் அவரை தேடி வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு சென்ற போதிலும் குறித்த இராணுவ வீரரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 இதனையடுத்து அந்த பெண் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முற்பட்ட சமயத்தில் வவுனியா பொலிஸாரினால் அவர் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!