கொழும்பு துறைமுக நகரில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு முதலீடு செய்யும் சைனா ஹார்பர் நிறுவனம்!

#SriLanka #Colombo #China
Mayoorikka
2 years ago
கொழும்பு துறைமுக நகரில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு முதலீடு செய்யும் சைனா ஹார்பர் நிறுவனம்!

அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சினோபெக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அந்த நிறுவனம் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதில் ஆர்வம் காட்டியதாகவும் தெரிவித்தார்.

 கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சப்ரி,இவாறு தெரிவித்தார்.

தனது சமீபத்திய சீன விஜயத்தின் போது, சீன நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர்களையும், சீனாவின் EXIM வங்கியின் தலைவரையும் சந்தித்து,கலந்துரையாடினார். 

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு சீனாவின் எக்சிம் வங்கி ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்துள்ளது. 

மேலும் இந்த நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றம் தொடர்பில் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். .

 மேலும் இந்த நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றம் தொடர்பில் ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

 இதேவேளை கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கார்ப்பரேஷனின் தலைவர் விருப்பம் தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!