பிரான்ஸில் நஹெலை சுட்டுக்கொன்ற காவலருக்கு ஆதரவாக 1 மில்லியன் நிதி திரட்டிய மக்கள்!
#world_news
#Lanka4
Dhushanthini K
2 years ago

பிரான்ஸில் பெரும் கலவரங்களுக்கு வித்திட்ட 17 வயதான இளைஞரை சுட்டுக்கொன்ற விவகாரத்தில், துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரிக்கு ஆதரவாக நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த அதிகாரிக்கு ஆதரவாக இதுவரை ஒரு மில்லியன் யூரோ நிதி சேகரிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை ஒரு அவமானகரமான செயல் என எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுட்டுக்கொல்லப்பட்ட நஹெலின் பாட்டி, காவலருக்கு காட்டப்பட்ட ஆதரவை பார்த்து மனம் உடைந்ததாக தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் போக்குவரத்து விதியை மீறியதாக தெரிவித்து நஹெல் என்ற இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து பிரான்ஸ் முழுவதும் வன்முறைகள் வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



