அமெரிக்க வெள்ளை மாளிகையில் கோகோயின் கண்டுப்பிடிப்பு!
#world_news
Dhushanthini K
2 years ago

அமெரிக்க வெள்ளை மாளிகையில் கோகோயின் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதை அடுத்து, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இது குறித்து இரகசிய சேவை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில், கொலம்பியா மாவட்ட தீயணைப்புத் துறை, பொருளை மதிப்பிடுவதில் உதவியதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இல்லை எனவும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த பொருள் வெள்ளை மாளிக்கைக்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை வெள்ளை மாளிகைக்கு சுற்றுப்பயணம் செய்யும் பொதுமக்கள் கிழக்குப் பகுதி மற்றும் வசிப்பிடத்தை மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



