சீனாவில் மக்களை பாதுகாக்க முன்னுரிமை அளிக்குமாறு ஜி ஜின்பிங் உத்தரவு!

#China #world_news #Lanka4
Dhushanthini K
2 years ago
சீனாவில் மக்களை பாதுகாக்க முன்னுரிமை அளிக்குமாறு   ஜி ஜின்பிங் உத்தரவு!

சீனாவில் மழை,  வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னுரிமை அளிக்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். 

சீனாவில்  கடந்த சில வாரங்களாக, தெற்கு, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். 

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகராட்சி உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையிலேயே அதிபர் ஜி ஜின்பிங் மேற்படி உத்தரவிட்டுள்ளார். 

பொதுவாக சீனா ஜூலையில் 'பல இயற்கை பேரழிவுகளை' சந்திக்கும் என்று வானிலை அமைப்புகள் எச்சரித்ததாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!