வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!‘

#Lanka4
Thamilini
2 years ago
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!‘

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாணந்துறை மொரவின்ன பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  

மனித கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, பாணந்துறை ஹிரண பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட  நபரிடம் இருந்து 9MM   ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அடங்கிய பை ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த நபர்  குற்றக் கும்பலைச் சேர்ந்த சலிந்து மல்ஷிகா எனப்படும் குடு சாலிந்துவின் சீடன் எனத் தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கி குடு சலிந்து பயன்படுத்தியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் மேற்படி விசாரணைகளை நடத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!