கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின் பார்வையிழந்துள்ள நோயாளர்கள் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
கண் சத்திரசிகிச்சையின் பின்னர் அந்த நோயாளர்களுக்குப் பயன்படுத்தப்படும் ப்ரிட்னிசோலோன் என்ற மருந்தின் தரம் தொடர்பான பிரச்சினை காரணமாக பெருமளவிலான கண்பார்வையற்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வைத்தியர்கள் ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
நோயாளிகளின். இந்த நிலையில், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு எதிராக வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு உட்பட பல அமைப்புக்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று (4ம் திகதி) முறைப்பாடு செய்துள்ளன.
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக, தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையில் பதிவு செய்யப்படாத பல்வேறு தரப்பினரின் ஊடாக மயக்க ஊசி மற்றும் ஏனைய வகை மருந்துகள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாகவும், கணிசமான நோயாளிகள் நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் இறந்து பார்வையற்றவர்களாக மாறியுள்ளனர்,
கொழும்பு கண் வைத்தியசாலை, நுவரெலியா வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல நோயாளர்கள் பார்வையிழந்துள்ளதாக ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பல சம்பவங்கள் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகி வருவதாகவும் அவர் கூறுகிறார்.
தரமற்ற மயக்க ஊசி மூலம் பேராதனை போதனா வைத்தியசாலையிலும் சிறிமாவோ பண்டாரநாயக்க வைத்தியசாலையிலும் பல நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இவ்வாறான சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு இந்த சம்பவத்திற்கு காரணமான அனைத்து அதிகாரிகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் இலஞ்ச ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.