அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள்: உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஃபிட்ச் ரேட்டிங்ஸ்
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பினால் இலங்கையின் வங்கி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையைப் போக்க அரசாங்கம் முன்வைத்த வேலைத்திட்டம் ஒரு முக்கிய நடவடிக்கை என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
ஆனால் மேலும் பல காரணிகளால் தொடர்ந்தும் அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தின் உள்நாட்டு கடன் மசீரமைப்பு அறிவிப்புகள், இலங்கை வங்கி தரமதிப்பீடுகள் மீதான நிச்சயமற்ற தன்மையை தீர்க்கும் வகையில் சென்றாலும், பல அபாயங்கள் உள்ளன.
குறிப்பாக, அரசாங்கத்தின் முன்மொழிவுகள், இறையாண்மையின் முக்கியமான வெளித்தரப்பு கடனாளர்களிடமிருந்து ஆதரவைப் பெற்றுள்ளதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
அவ்வாறில்லை எனில், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பில் சிக்கல் நிலை தோன்றலாம்.
இதன் விளைவாக, வங்கித் துறைக்கு மேலும் உறுதியற்ற தன்மை ஏற்படும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது