மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதிக்கு சென்ற சிரேஸ்ட சட்டத்தரணி!

#SriLanka #Mullaitivu
Mayoorikka
2 years ago
மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதிக்கு சென்ற சிரேஸ்ட சட்டத்தரணி!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட இடத்திற்கு சிரேஸ்ட சட்டத்தரணி இரட்ணவேல் நேற்று விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். கடந்த 29ஆம் திகதி கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர்பிரிவில் மனித எச்சங்கள் சில இனங்காணப்பட்டன.

 இந் நிலையில் கடந்த 30.06.2023அன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா நேரடிராகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

 இந் நிலையில் குறித்த மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில், எதிர்வரும் 06.07.2023அன்று மேலதிக அகழ்வுகளை மேற்கொள்வதற்கு நீதிபதியால் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 இவ்வாறான சூழலிலேயே குறித்த இடத்திற்கு சிரேஸ்ட சட்டத்தரணி இரட்ணவேல் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

 மேலும் குறித்த விஜயத்தின்போது சட்டத்தரணி இரட்ணவேலுடன் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!