சிறையில் உண்ணாவிரதம் இருந்த முகமது கடாபியின் மகன் வைத்தியசாலையில் அனுமதி

#Hospital #Prison #SouthAfrica
Prasu
2 years ago
சிறையில் உண்ணாவிரதம் இருந்த முகமது கடாபியின் மகன் வைத்தியசாலையில் அனுமதி

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த 1969 முதல் 2011-ம் ஆண்டு வரை அதிபராக இருந்த முகமது கடாபி சர்வாதிகாரியாக செயல்பட்டார். பின்னர் இவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து சொந்த ஊரான சிர்டேவில் புரட்சியாளர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

இதனையடுத்து சிரியா-லெபனான் எல்லையில் பிடிபட்ட அவரது மகன் ஹன்னிவால் லெபனான் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முகமது கடாபியின் மகன் ஹன்னிவால் 2015-ம் ஆண்டு முதல் சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

இந்தநிலையில் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டது. 

இதனையடுத்து ஹன்னிவாலை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். கவலைக்கிடமாக உள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!