காணாமல் போன இளைஞர் 8 வருடங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 8 வருடங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் காணாமல் போன இளைஞர் ஒருவர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
8 வருடங்களுக்கு முன்னர் அதாவது 2015 ஆம் ஆண்டு குறித்த இளைஞன் தனது வீட்டில் வளர்க்கும் நாய்களுடன் நடந்து சென்ற போது காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மகாணாமல் போன அவருக்கு 17 வயது. சமீபத்தில், தேவாலயத்திற்கு அருகே வெட்டுக்காயங்களுடன் கீழே விழுந்த இளைஞன் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டார்.
குறித்த இளைஞன் கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குறித்த இளைஞனின் குடும்ப அங்கத்தவர்களை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது, குறித்த இளைஞன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த இளைஞன் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டதாக உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த இளைஞன் தன்னை வேறு பெயரால் அழைப்பதாகவும், தனக்கு இன்னும் 14 வயது என்றும் கூறியுள்ளார்.
எனினும் குறித்த இளைஞருக்கு தற்போது 25 வயது ஆவதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உள்ளூர் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.



