ஐரோப்பிய வான்பாதுகாப்பு அமைப்பில் இணையும் சுவிட்சர்லாந்து!

#world_news #Lanka4
Dhushanthini K
2 years ago
ஐரோப்பிய  வான்பாதுகாப்பு அமைப்பில் இணையும் சுவிட்சர்லாந்து!

ஐரோப்பிய ஸ்கை ஷீல்ட் எனப்படும் வான்பாதுகாப்பு அமைப்பில் இணைய சுவிட்சர்லாந்து விரும்புவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 ஐரோப்பிய ஸ்கை ஷீல்ட் என்பது 2022 இல் ஜெர்மனியால் அமைக்கப்பட்ட ஒரு பொதுவான வான் பாதுகாப்புத் திட்டமாகும். இது ஐரோப்பிய வான் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. ரஷ்யா உக்ரைன் போரை தொடர்ந்து கவனம் பெறுகிறது. 

இந்நிலையில், இந்த அமைப்பில் இணைய சுட்சர்லாந்து விரும்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர்,  வயோலா அம்ஹெர்ட்,  ஆஸ்திரியா மற்றும் ஜெர்மனியில்  தனது சகாக்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, பிரகடனத்தில் கையெழுத்திடுவது குறித்து ஆராயப்பட்டதாக கூறியுள்ளார். 

இதேவேளை இந்த திட்டத்தில்,  ஜெர்மனி, பிரிட்டன், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் உட்பட மொத்தம் 17 ஐரோப்பிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 

பேட்ரியாட் ஏவுகணை அமைப்பு போன்ற வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை ஒருங்கிணைத்து நாடுகளுக்கான செலவைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!