உணவுகளின் விலை குறைக்கப்படுமா? : நாளை முடிவு!
#SriLanka
#Food
#Lanka4
Thamilini
2 years ago
எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், உணவுகளின் விலையும் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்த முடிவு நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலையைக் காட்சிப்படுத்துவதைக் கட்டாயமாக்குவதற்கு வர்த்தக அமைச்சர் தீர்மானித்துள்ளார் எனவும், அது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் எனவும் உணவ உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 204 ரூபாவால் குறைக்கப்பட்டு 2982 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.