பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவந்த துருக்கி மற்றும் எகிப்து!

துருக்கி மற்றும் எகிப்து ஆகிய இருநாடுகளும் நீண்டகாலமாக நீடித்த பதற்றங்களை முடிவுக்கு கொண்டுவந்துள்ளன.
இதன்படி இவ்விரு நாடுகளும் தங்கள் நாட்டிற்கான தூதர்களை நியமித்து பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், கெய்ரோவிற்கான துருக்கிய தூதராக சாலிஹ் முட்லு சென் மற்றும் அங்காராவிற்கான எகிப்திய தூதராக அமர் எல்ஹமாமி ஆகியோரை இரு நாடுகளும் நியமித்துள்ளன.
எகிப்தும் துருக்கியும் செவ்வாயன்று முழு இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்கும் நோக்கில் மேலும் ஒரு படியை எடுத்துவைத்துள்ளன. இது இரண்டு பிராந்திய சக்திகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தின் சமீபத்திய படியாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் ஒருமுறை இயல்பான உறவுகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது எனவும், துருக்கிய மற்றும் எகிப்திய மக்களின் நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் பணியாற்றுவதற்கான அவர்களின் பரஸ்பர உறுதியை நிரூபிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



