மேற்கத்தேய நாடுகளின் ஆத்திரமூட்டல் செயற்பாடுகளுக்கு எதிராக மொஸ்கோ எழுந்து நிற்கும் - புட்டின்!

மேற்கத்தேயநாடுகளின் ஆத்திரமூட்டல் செயற்பாடுகளுக்கு எதிராக மொஸ்கோ மீண்டும் எழுந்து நிற்கும் என ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் பல ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இது ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மெய்நிகர் கூட்டத்தில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், வெளிநாட்டு வர்த்தகத்தில் உள்ளூர் நாணயங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆத்திரமூட்டல்களுக்கு" எதிராக ரஷ்யா எழுந்து நிற்கும் எனவும், மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் ஆபத்து அதிகரித்து வருவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



