சட்டவிரோதமான முறையில் தங்கக் கரைசலைக் கடத்த முயன்ற இளம் பெண் கைது
பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 04 பொதிகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற எடுத்துச் சென்ற விமான நிலைய கடமையில்லா வர்த்தக நிலைய ஊழியர் ஒருவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் தங்கக் கரைசலைக் கடத்த முயன்ற இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (04) காலை 08.45 மணியளவில் குறித்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பொதிகளை தனது அந்தரங்கப் பகுதியில் ஒட்டிக்கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேற முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
24 வயதான இந்த யுவதி கட்டுநாயக்க விமான நிலைய கடமையில்லா வர்த்தக வளாகத்தில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த பார்சல்கள் 04 கிலோகிராம் எடையுள்ளதாகவும், விமான நிலைய பாதுகாப்பு கமரா அமைப்பின் ஊடாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் குழு இந்த சம்பவத்தை அவதானித்ததையடுத்து, கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளவுள்ளனர்.