கால்நடை தீவனம் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

#SriLanka #Accident
Prathees
2 years ago
கால்நடை தீவனம் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

கால்நடை தீவனம் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் வாகனத்தின் சாரதி காயமடைந்து டிக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

 ஹட்டன் றோட்டஸ் தோட்டத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 ஹட்டன் றோட்டஸ் தோட்டத்திலிருந்து அம்பேவெல கால்நடை பண்ணைக்கு கால்நடை தீவனங்களை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் அதிக மழை காரணமாக வழுக்கி கவிழ்ந்துள்ளதாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

 தற்போது பெய்து வரும் கடும் மழையினால் ஹட்டன் கொழும்பு, ஹட்டன் நுவரெலியா ஆகிய நகரங்களின் பிரதான வீதிகள் மற்றும் பக்க வீதிகள் வழுக்கும் தன்மையினால் வாகனங்களை செலுத்தும் போது கவனமாகவும் மெதுவாகவும் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!