ஜோசப் பொரலின் சீன விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது!
#China
#world_news
#Lanka4
Dhushanthini K
2 years ago

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரல் சீனா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அவரது பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த பயணம் ரத்து செய்யப்பட்டமைக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.
ஜோசப் பொரெல் ஜூலை 10 ஆம் திகதி பெய்ஜிங்கிற்குச் சென்று தனது சீனப் பிரதிநிதியைச் சந்தித்து மனித உரிமைகள் மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் போர் உள்ளிட்ட "மூலோபாய பிரச்சினைகள்" பற்றி விவாதிக்க இருந்தார் என சீனாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதர் தெரிவித்தார்.



