உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு பெண் உட்பட 4 பேர் கருகி பலி
#India
#Death
#Accident
#fire
#Died
Mani
1 year ago

உத்தரபிரதேச மாநிலம் ஜான்வி மாவட்டத்தில் உள்ள சிப்ரிபஜார் பகுதியில், மூன்று மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் மற்றும் பல கடைகள் இயங்கி வருகிறது.
நேற்று இரவு எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு கட்டிடம் முழுவதும் வேகமாக பரவியது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 10 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கட்டிடத்தில் சிக்கி கொண்ட இன்சூரன்சு நிறுவனத்தை சேர்ந்த உதவி பெண் மேலாளர் உள்பட 4 பேர் தீயில் கருகி உயிர் இழந்தனர். 3 மாடி கட்டிடத்தை கடுமையாக சேதப்படுத்திய தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.



