நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 4 பேர் டெல்லியில் கைது
#India
#Student
#Delhi
#exam
#doctor
#Tamilnews
#School Student
#College Student
#Examination
Mani
2 years ago

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 4 பேர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி எய்ம்ஸில் 2ம் ஆண்டு படித்து வரும் நரேஷ் பிஷ்ரோய் இந்த கும்பலுக்கு தலைவன் என தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பதிலாக முதலாம் ஆண்டு மாணவர்களை தேர்வு எழுத வைத்தது தற்போது அம்பலமாகி உள்ளது. தங்களை அணுகும் ஒவ்வொரு மாணவரிடமும் தலா ரூ.7 லட்சம் வசூல் செய்துள்ளனர்.
குற்றவாளிகளிடம் இருந்து மடிக்கணினிகள் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.



