அமெரிக்காவில் இந்தியத் துாதரகம் தீ வைப்பு!
#India
#United_States
#world_news
#Lanka4
#Embassy
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூதரகத்திற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் வேளையில் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இந்தியாவின் துணை தூதகரம் கடந்த 2 ஆம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்களால் தீ வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
தீ வைப்பு சம்பவ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலானது. அதில், நள்ளிரவில் தூதரகத்தை நபர் எரிபொருள் ஊற்றி எரித்துள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது.
கடந்த 5 மாதங்களில் இந்திர தூதகரத்தின் மீது நடத்தப்பட்ட 2 வது தாக்குதல் இதுவாகும்.
இந்த செயலை அமெரிக்கா கண்டிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.



