யாழ் அச்சுவேலி சம்பவம்: மேலும் 24 பேர் கைது!

#SriLanka
Mayoorikka
2 years ago
யாழ் அச்சுவேலி சம்பவம்: மேலும் 24 பேர் கைது!

யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இது வரை 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 குறித்த சம்பவம் தொடர்பில், கைதான 28 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 9 பேரை எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டது.

 பெண்ணொருவரின் படங்களை கணிணி ஊடாக செம்மையாக்கம் செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக சந்தேகித்து ஜுன் மாதம் 28 ஆம் திகதி இரவு அச்சுவேலி நீர்வேலி பகுதியிலுள்ள சிலர், குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த இரு இளைஞர்களை தாக்கியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.

 இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரால், அமைதியின்மையை கட்டுப் படுத்த வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

 இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், மேலும் 24 சந்தேக நபர்கள் கைது செய்யபட்டனர். 24 சந்தேக நபர்களையும் (04) இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!