ஈரானில் துாக்குத்தண்டனையானது 6 மாதங்களில் 354 ஆக பதிவு - மனித உரிமைகள் அமைப்பு

#world_news #Lanka4 #Iran #லங்கா4
ஈரானில் துாக்குத்தண்டனையானது 6 மாதங்களில் 354 ஆக பதிவு - மனித உரிமைகள் அமைப்பு

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் ஈரானில் 354 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

 நாா்வேயில் செயல்பட்டு வரும் அந்த அமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஜூன் 30-ஆம் தேதி வரை தூக்கிலிடப்பட்ட 354 பேரில் 20 சதவீதம் போ் சன்னி பிரிவைச் சோ்ந்த பலூச் இனத்தவா்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந்த 6 மாத காலத்தில், போதைப் பொருள் தொடா்பான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 206 பேருக்கு மரண தண்டனை  நிறைவேற்றப்பட்டது. 2022-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 261 போ் தூக்கிலிடப்பட்டிருந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!