தைவானின் எல்லைப் பகுதியில் பதற்றம் : 24 போர் விமானங்களை அனுப்பிய சீனா!
#world_news
#Lanka4
Dhushanthini K
2 years ago

தைவான் எல்லைப் பகுதியில் குண்டுவீச்சி விமானங்கள் உட்பட 24 சீன போர் விமானங்கள் காணப்பட்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை எட்டு சீன விமானங்கள் தைவான் ஜலசந்தியின் இடைக் கோட்டைக் கடந்ததாகவும், பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் நான்கு சீன போர்க்கப்பல்களும் "கூட்டு போர் தயார்நிலை ரோந்துப்பணியில்" ஈடுபட்டதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
சீனா தனது பகுதியில் இராணுவ அழுத்தத்தை அதிகரித்து வருவதாகவும், தைவான் குற்றம் சாட்டியுள்ளது.



